Saturday, 7 April 2018

கடம்பத்தூர் ஒன்றியத்தில் தீவிர மாணவர் சேர்க்கை வாரம்2018 ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெற்றது.

கடம்பத்தூர் ஒன்றியத்தில் தீவிர மாணவர் சேர்க்கை வாரம் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெற்றது. அதுசமயம் நம் ஒன்றிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சிரமம் பாராமல் களம் கண்டு மாணர்வர் சேர்க்கையை சிறப்புற நடத்தினர். 



































Friday, 6 April 2018

தேசிய அளவில் நடைபெறும் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிக்கு இறகு பந்து போட்டியில் மாநில அளவில் தேர்வு செயப்பட்ட ஆசிரியர்கள்.



தேசிய அளவில் நடைபெறும் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிக்கு  இறகு பந்து போட்டியில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட நம் கடம்பத்தூர் ஒன்றிய ஆசிரியர்கள் திரு. கார்த்திகேயன் (ஊ.ஒ.தொ.பள்ளி, இலுப்பூர்) மற்றும் திரு. இரா. கோபிநாத் (உ.ஒ.தொ.பள்ளி, ஒண்டிக்குப்பம்) அவர்கள் சத்தீஸ்கர் மாநிலம் சென்றனர்.


மாவட்ட  அளவில் நடைபெற்ற  அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டியில்  கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற கடம்பத்தூர் ஒன்றிய ஆசிரியர்கள். 



போதைப்பொருள் தீமை குறித்த விழிப்புணர்வு கட்டுரைப் போட்டியில் இரண்டம் இடத்தை பெற்ற கடம்பத்தூர் ஒன்றிய வெங்கத்தூர் கண்டிகை ஊ.ஒ.ந.நி.பள்ளி, 8-ம் வகுப்பு மாணவி செல்வி.கு.ஜனனி.

திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கள்ளசாராயம், மதுபானங்கள் போன்ற போதைப்பொருள் தீமை குறித்த விழிப்புணர்வு கட்டுரைப்  போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற கடம்பத்தூர் ஒன்றிய வெங்கத்தூர் கண்டிகை ஊ.ஒ.ந.நி.பள்ளி, 8-ம் வகுப்பு மாணவி செல்வி.கு.ஜனனி, அவர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். 





கடம்பத்தூர் ஒன்றிய வெங்கத்தூர் கண்டிகை ஊ.ஒ.ந.நி.பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் உயர்திரு. தொடக்கக்கல்வி துறை இயக்குநர் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

கடம்பத்தூர் ஒன்றிய வெங்கத்தூர் கண்டிகை ஊ.ஒ.ந.நி.பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் உயர்திரு. தொடக்கக்கல்வி துறை இயக்குநர் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
உடன் உயர்திரு. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள், உயர்திரு. மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள், கடம்பத்தூர் வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் திருமதி கிரிஜா அவர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு. இரகுபதி அவர்கள், மற்றும் அருகாமை பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.  

























கடம்பத்தூர் ஒன்றியம் சார்ந்த கூவம் புதுச்சேரி ஊ.ஒ.தொ.பள்ளிக்கு, 
இன்று 05 / 04 / 2018 வியாழக்கிழமை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு திருமதி. சுந்தரவல்லி அவர்கள் வருகை புரிந்தார்.  அச்சமயம் செங்கல் சூளையில் பணிபுரியும் பெற்றோர்களின் பிள்ளைகளிடத்தில்  (பள்ளி மாணவர்களிடத்தில்) பள்ளி சார்த்த அரசின் நலத்  திட்டங்கள் அவர்களுக்கு கிடைக்க பெறுவது குறித்தும் வரும் மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை குறித்தும் அவர்களின் படிப்பு நிலை குறித்தும் கேட்டு அறிந்தார். 

பள்ளி மாணவ, மாணவிகள்  தன் சுத்தம், சுற்றுப்புறச் சுகாதாரம், தனிநபர் கழிவறை பயன்பாடு முதலியவை குறித்து கூறிய கருத்துகளை  மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு திருமதி. சுந்தரவல்லி அவர்கள் அப்பள்ளி மாணவர்களிடத்தில்  கேட்டறிந்தார். 

பார்வையின் போது திருமிகு. மாவட்ட ஒருங்கினைப்பாளர் (அனைவருக்கும் கல்வி இயக்கம் (S.S.A) - A.P.O )  கடம்பத்தூர் ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி. கிரிஜா ( A.E.E.O ) மற்றும் திருமிகு. கடம்பத்தூர் ஒன்றிய  வட்டார வளர்ச்சி அலுவலர் ( B.D.O ) ஆகியோர் உடனிருந்தனர்.

இதைச்  சார்ந்த செய்தி 06/04/2018 வெள்ளிக்கிழமை தினமலர் நாளிதழில் வெளிவந்தது.






கடம்பத்தூர் ஒன்றியம் சார்ந்த வெண்மனம்புதூர் ஊ.ஒ.தொ.பள்ளிக்கு, 
இன்று 05 / 04 / 2018 வியாழக்கிழமை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு திருமதி. சுந்தரவல்லி அவர்கள் வருகை புரிந்தார்.  அச்சமயம் பள்ளி மாணவர்களிடத்தில் சுகாதாரம் மற்றும் தனி நபர் கழிவறை பயன்பாட்டினை பற்றி  மாணவர்கள்  அறிந்ததை கேட்டு அறிந்தார். பள்ளி மாணவி செல்வி.ஸ்வேதா தன் சுத்தம், சுற்றுப்புறச் சுகாதாரம், கழிவறை பயன்பாடு முதலியவை குறித்து கூறிய கருத்துகளை கண்டுற்றும் கேட்டும் மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு திருமதி. சுந்தரவல்லி அவர்கள் அம்மாணவியை மனதார பாராட்டி சால்வை அணிவித்து மகிழ்ந்தார்.