கடம்பத்தூர் ஒன்றியம் சார்ந்த கூவம் புதுச்சேரி ஊ.ஒ.தொ.பள்ளிக்கு,
இன்று 05 / 04 / 2018 வியாழக்கிழமை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு திருமதி. சுந்தரவல்லி அவர்கள் வருகை புரிந்தார். அச்சமயம் செங்கல் சூளையில் பணிபுரியும் பெற்றோர்களின் பிள்ளைகளிடத்தில் (பள்ளி மாணவர்களிடத்தில்) பள்ளி சார்த்த அரசின் நலத் திட்டங்கள் அவர்களுக்கு கிடைக்க பெறுவது குறித்தும் வரும் மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை குறித்தும் அவர்களின் படிப்பு நிலை குறித்தும் கேட்டு அறிந்தார்.
பள்ளி மாணவ, மாணவிகள் தன் சுத்தம், சுற்றுப்புறச் சுகாதாரம், தனிநபர் கழிவறை பயன்பாடு முதலியவை குறித்து கூறிய கருத்துகளை மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு திருமதி. சுந்தரவல்லி அவர்கள் அப்பள்ளி மாணவர்களிடத்தில் கேட்டறிந்தார்.
பார்வையின் போது திருமிகு. மாவட்ட ஒருங்கினைப்பாளர் (அனைவருக்கும் கல்வி இயக்கம் (S.S.A) - A.P.O ) கடம்பத்தூர் ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி. கிரிஜா ( A.E.E.O ) மற்றும் திருமிகு. கடம்பத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ( B.D.O ) ஆகியோர் உடனிருந்தனர்.
இதைச் சார்ந்த செய்தி 06/04/2018 வெள்ளிக்கிழமை தினமலர் நாளிதழில் வெளிவந்தது.





No comments:
Post a Comment