Friday, 2 February 2018

கடம்பத்தூர் ஒன்றியம் சார்ந்த நுங்கம்பாக்கம் ஊ.ஒ.தொ.பள்ளிக்கு இன்று 02 / 02 / 2018 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு சுந்தரவல்லி அவர்கள் வருகை புரிந்தார்.

கடம்பத்தூர் ஒன்றியம் சார்ந்த நுங்கம்பாக்கம் ஊ.ஒ.தொ.பள்ளிக்கு, 
இன்று 02 / 02 / 2018 வெள்ளிக்கிழமை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு திருமதி. சுந்தரவல்லி அவர்கள் வருகை புரிந்தார்.  அச்சமயம் பள்ளி மாணவர்களின் இந்திய வரைபட பயன்பாட்டினையும் இந்திய நாட்டின் மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்களை மிக சரியாக மாணவர்கள் கூறியதையும் கேட்டு பாராட்டினார். 
இப்பள்ளிக்கு நுங்கம்பாக்கம் கிராம மக்கள் வழங்கிய கணினி மற்றும் திரைவிழ்த்தியை  (PROJECTOR) மாணவர்களுக்கு பயன்படுத்தும் விதம் கண்டு பள்ளி ஆசிரியர்களை  பாராட்டினார்.

Saturday, 9 December 2017

கடம்பத்தூர் ஒன்றிய பேரம்பாக்கம் குறுவள மையத்தை சார்ந்த 8 பள்ளிகளில் 08/12/2017 வெள்ளிக்கிழமை அன்று ஆய்வு அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடம்பத்தூர் ஒன்றிய பேரம்பாக்கம் குறுவள மையத்தை சார்ந்த 8 பள்ளிகளில் 08/12/2017 வெள்ளிக்கிழமை அன்று உதவிக்கல்வி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி கிரிஜா அவர்களும் கூடுதல்  உதவிக்கல்வி தொடக்கக்கல்வி அலுவலர் திரு. இரகுபதி அவர்களும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ( பொறுப்பு ) திருமதி. மகேஸ்வரி அவர்களும் மற்றும் அனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் ஆய்வு மேற்கொண்டனர், இதன் சார்ந்து பேரம்பாக்கம் குறுவள மையத்தில் மீளாய்வு கூட்டம் (REVIEW MEETING) நடைபெற்றது  
இம்மீளாய்வு கூட்டத்தில் பள்ளிகளின் நிறை குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது, பள்ளிகளின் தரம் உயர ஆய்வு அலுவலர்களால் தகுந்த அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.   

Friday, 8 December 2017

கடம்பத்தூர் ஒன்றிய உளுந்தை ஊ.ஒ.தொ.பள்ளியில், "DREAM INDIA FOUNDATIION" சார்பில் நடைபெற்ற ஓவியம் வரைதல் பயிற்சி மற்றும் போட்டில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி ஊக்கிவிக்கப்பட்டது.

கடம்பத்தூர் ஒன்றிய கொப்பூர் ஊ.ஒ.தொ.பள்ளிக்கு , "STI SANOH INDIA PRIVATE LTD", நிறுவனத்தால் வழங்கப்பட்ட பள்ளிச்சீருடைகள், மேசைகள், பீரோ, ஒலிபெருக்கி, மைக், மற்றும் TRAY முதலிய பள்ளிக்கு தேவையான தளவாடங்கள் கூடுதல் உதவித்தொடக்க கல்வி அலுவலர் திரு. ரகுபதி அவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை அவர்களிடத்தில் வழங்கப்பட்டது.

Tuesday, 21 November 2017

இன்று (20/11/2017) கன்னிம்மா நகர் ஊ. ஒ. தொ. பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் கழுத்து பட்டை (TIE), இடுப்பு பட்டை (BELT), அடையாள அட்டை (IDENTITY CARD) முதலியவைகள் பள்ளி சார்பில் வழங்கபட்டன.

இன்று (20/11/2017)   கன்னிம்மா நகர் ஊ. ஒ. தொ. பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் கழுத்து பட்டை (TIE), இடுப்பு பட்டை (BELT), அடையாள அட்டை (IDENTITY CARD) முதலியவைகள் பள்ளி சார்பில் வழங்கபட்டன.    

Thursday, 16 November 2017

தேசிய அறிவியல் புத்தாக்கப் புனைவுத்திட்ட (RAA) அறிவியல் கண்காட்சி!

கடம்பத்தூர் குறு மைய அளவில் 16/11/2017 அன்று நடைபெற்ற அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) சார்பிலான தேசிய  அறிவியல்  புத்தாக்கப் புனைவுத்திட்டம் (RAA)  அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்  திருமதி. கிரிஜா அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு   பரிசுகளை வழங்கினார்.

Sunday, 10 September 2017

கடம்பத்தூர் ஒன்றிய வளசைவெட்டிக்காடு ஊ.ஒ.ந.நி.பள்ளியில் வாழ்க்கை திறன் சார்ந்த பயிற்சி வகுப்புகள் தொடக்கம்.

"ASHA FOUNDATION",  மூலமாக ஓர் கணினி ஆசிரியர் நியமிக்கப்பட்டு வாரத்தில் இரு நாட்கள் வளசைவெட்டிக்காடு ஊ.ஒ.ந.நி.பள்ளி மாணவர்களுக்கு கணினி கற்றுத்தரப்படுகிறது.

வாரம் ஒருமுறை வளசைவெட்டிக்காடு ஊ.ஒ.ந.நி.பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் இலவசமாக  சிலம்ப  பயிற்சியாளரால்  கற்றுத்தரப்படுகிறது.

"HYUNDAI STEEL & CHOLAI FOUNDATION"னால்  வளசைவெட்டிக்காடு ஊ.ஒ.ந.நி.பள்ளிக்கு LED T.V. மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.